வடகிழக்குப் பருவமழை தொடக்கம் - தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் முக்கிய உத்தரவு!
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர
Cm vijay


சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துதல், நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுத்தல் மற்றும் பொதுமக்களுக்குத் தடையற்ற மருத்துவச் சேவையை வழங்குதல் என மூன்று முக்கிய இலக்குகளின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்பட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழைநீர் தேங்குதல், குடிநீர் மாசுபடுதல் மற்றும் கொசுக்கள் பெருகுதல் போன்ற காரணங்களால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம்.

எனவே, நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட அளவில் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற உடல்நலப் பாதிப்புகளால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைத் தவிர்க்க, நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெள்ளம் காரணமாகப் போக்குவரத்து பாதிப்பு அல்லது பிற இடையூறுகள் ஏற்பட்டாலும், பொதுமக்களுக்கான மருத்துவச் சேவை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வது முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்காக, நோய்த் தடுப்பு, உயிரிழப்பைக் குறைத்தல் மற்றும் தடையற்ற மருத்துவச் சேவை ஆகிய மூன்று இலக்குகளையும் அடையும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V