உஸ்பெகிஸ்தான் கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீரர்கள் 6 பதக்கங்கள் வென்று சாதனை!
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.) தாஷ்கண்ட் நகரில் அக்டோபர் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், 49 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்ட இந்தச் சர்வதேசப் போ
Tamil Nadu players create history by winning 6 medals at the Uzbekistan Kickboxing World Cup


சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)

தாஷ்கண்ட் நகரில் அக்டோபர் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், 49 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்ட இந்தச் சர்வதேசப் போட்டியில், இந்திய அணியின் சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்கள் தங்களது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி பதக்கங்களைப் பெற்றனர்.

ஜூனியர் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற அகில் ரக்ஷித் சிறப்பாகச் செயல்பட்டு இரண்டு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார். அவரது இந்த வெற்றி தமிழக விளையாட்டு ஆர்வலர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

இளம் சிறுமியர் பிரிவில் பங்கேற்ற ரக்ஷத்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்று அசத்தினார்.

அதேபோல், ஆண்கள் பொதுப் பிரிவில் போட்டியிட்ட கிஷோர் ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

இந்த முடிவுகளின் அடிப்படையில், தமிழக வீரர்கள் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றுள்ளனர். சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் தமிழக வீரர்கள் வெளிப்படுத்திய இந்தச் செயல்பாடு, மாநிலத்திற்கும் இந்திய அணிக்கும் பெருமை சேர்த்துள்ளது.

போட்டியை முடித்துக்கொண்டு பதக்கங்களுடன் சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய அணியின் மேலாளர் ஓம் பிரகாஷ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் வீரர்களுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

சர்வதேசப் போட்டியில் பதக்கங்களை வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு விளையாட்டு ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V