Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், பாலியல் வழக்கில் திருமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மற்றொரு கைதி நேபாளத்தைச் சேர்ந்த சுதிர் போகத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் சிறை வளாகத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த புழல் மத்திய சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையின் பாதுகாப்பையும் மீறி கைதிகள் எவ்வாறு தப்பினர், பாதுகாப்புப் பணியில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டனவா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், தப்பியோடிய இருவரையும் பிடிப்பதற்காக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரமாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் சிறை நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P