Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)
ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலைக்கும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், வீரர் சிவராஜன் சோலைமலையின் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், சிவராஜன் சோலைமலை தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவரது வெற்றி புதிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிவராஜன் சோலைமலை மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் வாழ்த்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam