Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாக மஞ்சள் விளங்குகிறது. உணவு, மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இயற்கை நிறமிகள் தயாரிப்பில் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மஞ்சளுக்கு ஆண்டு முழுவதும் தேவை இருப்பதால், சரியான சாகுபடி முறைகளையும் சந்தை வாய்ப்புகளையும் பயன்படுத்தினால் விவசாயிகள் நல்ல வருமானம் பெற முடியும்.
அதிக மகசூல் பெறுவதுடன், உற்பத்திச் செலவைக் குறைத்து, மதிப்புக் கூட்டிய பொருட்களாக விற்பனை செய்வதும் லாபத்தை அதிகரிக்க உதவும்.
மஞ்சள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான முதல் படி தரமான விதை மஞ்சளைத் தேர்வு செய்வதாகும்.
நோயற்ற, நல்ல எடையுள்ள, முளைப்புத் திறன் கொண்ட விதைக் கிழங்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அழுகிய, சுருங்கிய மற்றும் பூச்சித் தாக்குதல் உள்ள கிழங்குகளைத் தவிர்க்க வேண்டும்.அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற உயர் மகசூல் தரும் ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
மஞ்சள் பயிருக்கு நல்ல வடிகால் வசதியுடன் கூடிய, வளமான செம்மண் அல்லது மணல் கலந்த வண்டல் மண் ஏற்றதாகும். இதனால் நிலத்தில் நீர் தேங்கினால் கூட கிழங்கு அழுகல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
மஞ்சள் சாகுபடியில் கிழங்கு அழுகல், இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் மற்றும் சில வகையான பூச்சித் தாக்குதல்கள் மகசூலைப் பாதிக்கக்கூடும்.
நன்கு மக்கிய தொழு உரம் அல்லது தரமான இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம்.
தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றை வேளாண் துறைப் பரிந்துரைப்படி அளிக்க வேண்டும்.
தேவையான நேரங்களில் களைகளை அகற்ற வேண்டும்.
வைக்கோல், இலைக் கழிவுகள் போன்ற பொருத்தமான இயற்கைப் பொருட்களைக் கொண்டு மூடாக்கு அமைக்கலாம்.
மஞ்சளை அறுவடை செய்து பச்சைக் கிழங்காக மட்டும் விற்பனை செய்வதைவிட, தரத்திற்கேற்ப பதப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமான கிடைக்கும்.
Hindusthan Samachar / LOGESHWARI V