கோவா முதல் மேற்கு வங்கம் வரை- ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ கொள்கையை முன்னெடுத்த ஜனசங்கம் -நிதின் நபின் புகழாரம்!
புதுடெல்லி, 21 அக்டோபர் (ஹி.ச.) இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்காக பாரதிய ஜனசங்கம் ஆற்றிய பங்களிப்பை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பாராட்டியுள்ளார். கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்ட விவகாரம் முதல் மேற்கு வங்கம் தொடர்பான அரசியல் சூழல
Nithin


புதுடெல்லி, 21 அக்டோபர் (ஹி.ச.)

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்காக பாரதிய ஜனசங்கம் ஆற்றிய பங்களிப்பை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பாராட்டியுள்ளார்.

கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்ட விவகாரம் முதல் மேற்கு வங்கம் தொடர்பான அரசியல் சூழல் வரை, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஜனசங்க உறுப்பினர்கள் முக்கியப் பங்காற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிதின் நபின் பேசுகையில்,

பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற விவாதங்களைக் கேட்டதுடன், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்தும் சிந்திக்க வாய்ப்பு கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.

அப்போது, ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்ற கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் பாரதிய ஜனசங்கம் ஆற்றிய பங்களிப்பு நினைவுக்கு வந்ததாக அவர் கூறினார்.

இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாகக் கட்டமைக்க வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையை முன்வைத்தவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி என நிதின் நபின் குறிப்பிட்டார்.

அவர் மறைந்த பின்னரும், அவரது இலட்சியத்தையும் கொள்கைகளையும் ஜனசங்கத் தொண்டர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.

1961-ஆம் ஆண்டு கோவாவை இந்தியாவுடன் இணைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றபோது, நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பான விவகாரங்களில் ஜனசங்க உறுப்பினர்கள் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியதாக நிதின் நபின் கூறினார்.

அதேபோல், மேற்கு வங்கத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த சில பகுதிகளை அன்றைய கிழக்கு பாகிஸ்தானுடன் இணைப்பதற்கான திட்டங்கள் இருந்ததாகவும், அவற்றுக்கு எதிராக ஜனசங்கத்தினர் குரல் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தற்போது வங்கதேசம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒற்றுமை தொடர்பான வரலாற்றுச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய நிதின் நபின், அந்தக் காலகட்டத்தில் ஜனசங்க உறுப்பினர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை நினைவுகூர்ந்தார்.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை வலியுறுத்தி செயல்பட்ட ஜனசங்கத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்பை நினைவுகூர்வதாகக் கூறிய அவர், அவர்களுக்கு தனது ஆழ்ந்த மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்தினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V