சென்னை வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் நேரில் ஆய்வு
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.) சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி மற்றும் ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பா
IT Minister Kumar inspects rain-hit areas in Velachery, Chennai


சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி மற்றும் ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் குமார், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குமார்,

ஏஜிஎஸ் காலனி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு மழைநீர் அதிகளவில் தேங்குவதாகத் தெரிவித்தார். அப்பகுதியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தேங்கியுள்ள மழைநீர் கால்வாய் வழியாக வீராங்கால் ஓடைக்குச் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். இருப்பினும், மழைநீரை விரைவாக வெளியேற்ற மோட்டார்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்

ஏஜிஎஸ் காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்காக 20 மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அவற்றைப் பயன்படுத்தி விரைவாகத் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், இப்பகுதியில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு நிலத்தின் உயரத்தை அதிகரிப்பது ஒரு வழியாக இருந்தாலும், அவ்வாறு செய்தால் அருகிலுள்ள குடியிருப்புகள் தாழ்வான நிலைக்குச் செல்லும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனால், நிரந்தரத் தீர்வைச் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்யும் சூழலில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்தி, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

Hindusthan Samachar / LOGESHWARI V