Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 22 அக்டோபர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கம்பிவட ஊர்தி எனப்படும் ரோப்கார் சேவைக்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 5ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களின் வசதிக்காகப் படிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், ரோப்கார் சேவைக்கான ஆன்லைன் முன்பதிவு அக்டோபர் 21, 2025 முதல் நவம்பர் 5, 2026 வரை நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், ரோப்கார் சேவையைப் பயன்படுத்தத் திட்டமிடும் பக்தர்கள், மலைக்கோயிலுக்குச் செல்ல படிப்பாதை அல்லது மின் இழுவை ரயில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பழனி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது பயணத்தைத் திட்டமிடும்போது இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Hindusthan Samachar / ANANDHAN