தொடர் கனமழையால் திருச்செந்தூர் சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது
திருச்செந்தூர், 22 அக்டோபர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கன மழைக்காண மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர
Rain flood


திருச்செந்தூர், 22 அக்டோபர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கன மழைக்காண மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், பரமன்குறிச்சி, கல்லாமொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை 12.20 மணி முதல் கனமழை பெய்யத் தொடங்கியது.

விட்டு விட்டு அதிகாலை 5.30 மணி வரை சுமார் 5 மணி நேரம் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் நகர் பகுதி, கிராம பகுதிகளில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

திருச்செந்தூர் சிவன்கோவில், டி.பி ரோடு, அரசு பள்ளி, பேருந்து நிலையம் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது. மேலும் நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

மேலும் மின்தடையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் புறநகர் பகுதிகளான சிவந்தி நகர் பகுதியில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து தேங்கி குளம் காட்சியளித்து வருகிறது.

அதேபோல் கிராமப்புறங்களில் தாழ்வாக உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.

கனமழை எச்சரிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது ஒரு சில இடங்களில் மிதமான மலையும் பெய்து வருகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V