ராஜராஜ சோழனைப் போற்றி வணங்குவோம்- அமைச்சர் அருண் ராஜ்
தமிழ்நாடு, 22 அக்டோபர் (ஹி.ச.) சோழ மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதயத் திருவிழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரைப் போற்றி வணங்குவோம் என்றும், தமிழர்களின் திறமையையும் ஒற்றுமையையும் உலகுக்கு பறைசாற்றுவோம் என்றும் மருத்த
TVK Arunraj


தமிழ்நாடு, 22 அக்டோபர் (ஹி.ச.)

சோழ மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதயத் திருவிழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரைப் போற்றி வணங்குவோம் என்றும், தமிழர்களின் திறமையையும் ஒற்றுமையையும் உலகுக்கு பறைசாற்றுவோம் என்றும் மருத்துவத் துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சாவூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் போல, தமிழர்கள் அனைவரும் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கும் நாளாக இந்த நாள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நில அளவை, வரிவிதிப்பு, நிர்வாகத் தணிக்கை, பிற்கால வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் மெய்க்கீர்த்தி எழுதும் முறை, சர்வதேச வர்த்தக உறவுகள், ஆன்மிகம் மற்றும் கலாசாரச் சின்னங்களை அமைத்தல் எனப் பல்வேறு துறைகளிலும் ராஜராஜ சோழன் இன்றளவும் முன்னுதாரணமாகத் திகழும் மாமன்னராக விளங்குகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, ராஜராஜ சோழனைப் போற்றி வணங்குவதுடன், தமிழர்களின் திறமையையும் ஒற்றுமையையும் உலகுக்கு எடுத்துரைப்போம் என்றும் அமைச்சர் அருண் ராஜ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P