Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 அக்டோபர் (ஹி.ச.)
உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், மாவோயிஸ்ட் அச்சுறுத்தலை ஒழிப்பதிலும், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதிலும் அவரது நிர்வாகத் திறன் முக்கியப் பங்காற்றியுள்ளதாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அமித் ஷாவின் சிறந்த நிர்வாகப் புரிதல் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளை மிகவும் பயனுள்ளதாகவும் வலிமையாகவும் மாற்றியுள்ளது.
குறிப்பாக மாவோயிஸ்ட் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பதில் கிடைத்துள்ள வெற்றிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கான லட்சியத்தை அடைவதில் அவரது பங்களிப்பு இன்றியமையாதது எனப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
மக்களின் சேவையில் அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
உள்துறை அமைச்சரின் பிறந்தநாளைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு தலைவர்களும் அமைச்சர்களும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V