தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை -ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு
தூத்துக்குடி, 22 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு
Rain school


தூத்துக்குடி, 22 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இ.ஆ.ப., வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 22ஆம் தேதியும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மழை பெய்யும் சூழலில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். நீர்நிலைகள், ஆற்றங்கரைகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பது அவசியம்.

மழை தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேபோல் நெல்லை மாவட்டத்திலும் கனமழை வெளித்து வாங்கியதன் காரணமாக அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V