418 திரைப்பட விமர்சனம் - மர்ம அறைக்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) பிரசாந்த் நீல் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 418 இத்திரைப்படத்தில், சைத்ரா ஆச்சார், சூர்யா ராஜ் வீரபதினி, சரண் லக்கராஜு, ப்ரீத்தி பகதாலா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ப


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

பிரசாந்த் நீல் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்

418

இத்திரைப்படத்தில், சைத்ரா ஆச்சார், சூர்யா ராஜ் வீரபதினி, சரண் லக்கராஜு, ப்ரீத்தி பகதாலா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘418’ திரைப்படம் மருத்துவக் கல்லூரி விடுதியில் 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் ஓர் அறையைச் சுற்றி நடைபெறும் மர்மமான சம்பவங்களை மையமாகக் கொண்ட திகில் திரைப்படம்.

கீர்த்தன் நடகௌடா இயக்கியுள்ள இப்படம், 2026 அக்டோபர் 23 அன்று பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள ‘418’ திரைப்படம், திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் 15 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருக்கும் அறை, அந்த அறையைச் சுற்றி நிலவும் அச்சம், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் எனப் படத்தின் மையக்கரு அமைந்துள்ளது.

சாதாரணமாகத் தொடங்கும் ஒரு சம்பவம், நாளடைவில் புரிந்துகொள்ள முடியாத மர்மமாக மாறினால் என்ன நடக்கும்? அறிவியல் ரீதியாக விளக்கம் தேடும் முயற்சிகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் இடையே எழும் கேள்விகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

விவேக் என்ற இளம் கதாபாத்திரம், நிஜத்திற்கும் மாயத் தோற்றங்களுக்கும் இடையே குழப்பமடையும் சூழலும் கதையின் மர்மத்தை அதிகரிக்கிறது.

நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் அறைக்குள் என்ன நடந்தது, அது ஏன் பூட்டப்பட்டது, அங்கு நிகழ்ந்த சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது என்ன என்பதே பார்வையாளர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்டு, மர்மத்தின் பின்னணியை அறிந்துகொள்ளத் தூண்டும் கதைக்களம் இப்படத்தின் முக்கிய ஈர்ப்பாக இருக்கிறது.

அச்சம், சந்தேகம், எதிர்பாராத நிகழ்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைகளை விரும்புவோருக்கு ‘418’ திரைப்படம் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒரு மூடப்பட்ட அறையைச் சுற்றிய மர்மம், அறிவியலுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான கேள்விகள், அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டுள்ள ‘418’ திரைப்படம், திகில் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஆர்வமூட்டும் படைப்பாக 418 அமைந்துள்ளது.

Hindusthan Samachar / Durai.J