தமிழகத்தில் 69 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் – தேசிய விருது பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு விஜய் வாழ்த்து
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 69 பேருக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பணிநியமன ஆண
விஜய்


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 69 பேருக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக். 23) நடைபெற்ற நிகழ்ச்சியில், 26 உதவி வேளாண்மை அலுவலர்கள், 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 பேருக்குப் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, 2024–2025ஆம் ஆண்டுக்கான நிதி மேலாண்மையில் சிறந்து விளங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்ட ஆலைகளுக்கும், 2025–2026ஆம் ஆண்டுக்கான நிதி மேலாண்மை மற்றும் சிறந்த செயல்திறனுக்கான பிரிவுகளிலும் தேசிய அளவில் விருதுகள் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களை முதலமைச்சர் சந்தித்துப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ரா. வினோத் உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 69 பேருக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கியதுடன், தேசிய அளவில் விருதுகளைப் பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam