சன்னரக அரிசி என்ற பெயரில் ரேஷன் அரிசி விற்பனையா? – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) அமுதம் கூட்டுறவுக் கடைகளில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் குறித்து எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளிய
டிடிவி


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

அமுதம் கூட்டுறவுக் கடைகளில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் குறித்து எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமுதம் கூட்டுறவுக் கடைகள் மூலம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதனால் விற்பனை மந்தமடைந்து அரிசி மூட்டைகள் அதிகளவில் தேக்கமடைந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்த சன்னரக அரிசி விற்பனையின்போது, ரேஷன் அரிசியையே கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியதாகவும், வாங்கிய அரிசியைத் திருப்பி ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசியின் தரம் முறையாகப் பரிசோதிக்கப்பட்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியைப் பாலிஷ் செய்து, சன்னரக அரிசி என்ற பெயரில் விற்பனை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சன்னரக அரிசி என்ற பெயரில் தரமற்ற அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தரமான சன்னரக அரிசி கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam