Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 அக்டோபர் (ஹி.ச.)
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் சுதான்ஷு திரிவேதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளையும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து விமர்சித்த சுதான்ஷு திரிவேதி, அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஊழலில் ஈடுபடுவதாகவும், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்திய மதம் மற்றும் கலாசாரத்தின் மீது காங்கிரஸ் கட்சி வெறுப்பைக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட அவர், இந்த நிலை நாட்டுக்கு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் தற்போதைய இருப்பிடம் தொடர்பாகவும் சுதான்ஷு திரிவேதி கருத்து தெரிவித்தார்.
அவர் இந்தியாவில் இல்லாமல் வியட்நாமில் எங்கோ சுற்றித் திரிவதாகத் தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறிய திரிவேதி, ராகுல் காந்தி நாட்டுக்கும் தனது சொந்தக் கட்சிக்கும் புரியாத புதிராக மாறிவிட்டதாக விமர்சித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் செயல்பாடுகள் சாதனைகளைக் கொண்டிருப்பதாகவும், ராகுல் காந்தியின் செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
காங்கிரஸ் கட்சி தனது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருப்பதுடன், நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளதாக சுதான்ஷு திரிவேதி குற்றம்சாட்டினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V