சென்னை - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில் சேவை தொடக்கம்..!
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) சென்னை புறநகர் ரயில் பயணிகளின் வசதிக்காக, அரக்கோணம் - சென்னை இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார ரயில் சேவை அக்டோபர் 23-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை டிசம்பர் 24-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக
Train


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை புறநகர் ரயில் பயணிகளின் வசதிக்காக, அரக்கோணம் - சென்னை இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார ரயில் சேவை அக்டோபர் 23-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை டிசம்பர்

24-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.35 முதல் அதிகபட்சம் ரூ.230 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12 பெட்டிகளைக் கொண்ட இந்தக் குளிர்சாதன மின்சார ரயில், வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் இயக்கப்படும். சோதனை ஓட்டம் நிறைவடைந்த பின்னர், அதன் செயல்பாடு தொடர்பான ஆய்வறிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

அதன்பிறகு ரயில் சேவையைத் தொடர்ந்து இயக்குவது அல்லது நீட்டிப்பது குறித்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 6.30 மணியளவில் ஆவடியில் இருந்து புறப்படும் ரயில், வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று காலை 7.45 மணிக்கு அரக்கோணத்தைச் சென்றடையும்.

பின்னர், காலை 8 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் ரயில், திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர், வில்லிவாக்கம், பெரம்பூர், பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட நிலையங்களில் நின்று காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தை அடையும்.

காலை 9.40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில், ஆவடி வரையிலான அனைத்து நிலையங்களிலும் நின்று காலை 10.25 மணிக்கு சென்றடையும்.

மாலை 5.25 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்படும் ரயில், வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று மாலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தை அடையும்.

தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்குப் புறப்படும் ரயில், பேசின்பிரிட்ஜ், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு ஆகிய நிலையங்களில் நின்று இரவு 7.55 மணிக்கு அரக்கோணத்தைச் சென்றடையும்.

அங்கிருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்படும் ரயில், திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர் ஆகிய நிலையங்களில் நின்று இரவு 9.10 மணிக்கு ஆவடியை அடையும்.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்ல அதிகபட்சமாக ரூ.230 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் வரை பயணிக்க குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படும்.

அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் செல்ல ரூ.60, திருவள்ளூர் செல்ல ரூ.90 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V