பகவந்த் மான் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க வேண்டும் – பா.ஜ.க தலைவர் சுனில் ஜாக்கர் எச்சரிக்கை
சண்டிகர், 23 அக்டோபர் (ஹி.ச.) பஞ்சாபில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாஜக தலைவர் சுனில் ஜாக்கர், முதல்வர் பகவந்த் மான் அந்தக் குடும்பத்தைச் சந்தித்துப் பேசாவிட்டால், அவரது இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்
Bjp


சண்டிகர், 23 அக்டோபர் (ஹி.ச.)

பஞ்சாபில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாஜக தலைவர் சுனில் ஜாக்கர், முதல்வர் பகவந்த் மான் அந்தக் குடும்பத்தைச் சந்தித்துப் பேசாவிட்டால், அவரது இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லிக்குச் சென்று ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தின் முன்பும் போராட்டம் நடத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுனில் ஜாக்கர்,

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டினார்.

அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரத்தைப் பஞ்சாப் சட்டப்பேரவையில் தொடர்ந்து எழுப்பப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள் முதல்வர் பகவந்த் மான் அந்தக் குடும்பத்தினரைச் சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு சந்திக்காவிட்டால், கூட்டத்தொடர் முடிந்ததும் முதல்வரின் இல்லத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து டெல்லிக்குச் சென்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

முன்பு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து நேருக்கு நேர் பேசுமாறு சவால் விடுத்த பகவந்த் மான், தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துப் பேச வேண்டும் என சுனில் ஜாக்கர் கூறினார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியாவையும் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்போவதாகத் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆம் ஆத்மி கட்சி மிரட்டல், ஆசை காட்டுதல் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதாக சுனில் ஜாக்கர் குற்றம்சாட்டினார்.

மேலும், குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறப்படுபவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதாகவும் விமர்சித்தார்.

அபோஹரில் அஜய் என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபரை ஆம் ஆத்மி கட்சி இணைத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அந்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் தற்போது ஜாமீனில் வெளியே இருப்பதாகவும் ஜாக்கர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில், உயிரிழப்பதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும் என்பதே தங்களது முக்கியக் கோரிக்கை என சுனில் ஜாக்கர் கூறினார்.

மேலும், சம்பவத்தின் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V