அரசு ஊழியர்கள் கடன், முன்பணம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாடு, 24 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கணினி, இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான முன்பணம் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, முன்பணம் பெறுவதற்கு 6 ஆண்டுகள் பணிபு
தலைமைச் செயலகம்


தமிழ்நாடு, 24 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கணினி, இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான முன்பணம் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, முன்பணம் பெறுவதற்கு 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற முந்தைய தகுதி நிபந்தனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இனி, அரசு ஊழியர்கள் தங்களது தகுதிகாண் பருவத்தை (Probation Period) நிறைவு செய்திருந்தாலே முன்பணம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களைப் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தப்படும் என நிதித்துறை அறிவித்திருந்த நிலையில், அதனைச் செயல்படுத்தும் வகையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்த அரசு ஊழியர்கள், 6 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவடையும் வரை காத்திருக்காமல் முன்பணம் பெற விண்ணப்பிக்க முடியும்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P