மெத் போதைப்பொருள் கடத்தல் வழக்கு - பெங்களூருவைச் சேர்ந்த பெண் கைது
சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.) சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2.6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு துணை ஆணையருக்
Arrest


சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.)

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2.6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு துணை ஆணையருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 3ஆம் தேதி புளியந்தோப்பு தனிப்படை போலீசார் புரசைவாக்கம் வடமலை தெருவில் சோதனை நடத்தினர். அப்போது, பிரவீன் குமார், ஸ்ரீராம், முகமது இம்ரான் கான் ஆகிய மூவரைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 765 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த 14ஆம் தேதி புதுச்சேரியைச் சேர்ந்த ராஜேஷ் (34) மற்றும் போவஸ் குர்வில்லா ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 16 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பெங்களூருவைச் சேர்ந்த கிறிஸ்டினா ரோஷினி (30) என்ற பெண்ணைப் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 2.6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், கிறிஸ்டினா ரோஷினி டெல்லியில் இருந்து போதைப்பொருளை வாங்கி, சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள நபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P