மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் நிலச்சரிவு - மண்ணில் புதைந்த அரசுப் பேருந்து
மேட்டுப்பாளையம், 24 அக்டோபர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பர்லியார் அருகே சென்று கொண்டிருந்தபோது
Nilgiri


மேட்டுப்பாளையம், 24 அக்டோபர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், உதகையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பர்லியார் அருகே சென்று கொண்டிருந்தபோது, மலையின் மேற்பகுதியில் இருந்து மண் மற்றும் மரங்கள் திடீரெனச் சரிந்து பேருந்தின் மீது விழுந்தன.

இதனால் பேருந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மண் சரிவால் அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேருந்தின் மீது விழுந்த மண் மற்றும் மரங்களை அகற்றி, அதில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வெளியாகியுள்ள செய்திகளின்படி, பேருந்தில் இருந்த ஆறு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காயமடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலைகளில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் மலைப்பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

சாலைகளில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும் படி நகராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நேற்று இரவு முதல் கனமழை மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மலைபெய்து வந்தது இந்த நிலையில்,

இன்று காலை 7:10 மணிக்கு செல்லும் மழை இரயில் ரயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் போக்குவரத்து ரத்து என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது இதனால் மலை ரயிலில் பயணம் செய்ய இருந்த சுற்றுலா பயணி ஏமாற்றம்

Hindusthan Samachar / LOGESHWARI V