Enter your Email Address to subscribe to our newsletters

கோழிக்கோடு , 25 அக்டோபர் (ஹி.ச.)
கேரளாவில் வைதேகம் ரிசார்ட் விவகாரத்தில், சி.பி.எம். நிர்வாகி ஜேம்ஸ் மாத்யு தன்னை மிரட்டியதாக ஷியாம்ஜித் குற்றம் சாட்டியுள்ளார்.
சி.பி.எம். மூத்த தலைவர் இ.பி. ஜெயராஜன் மற்றும் அவரது மனைவி இந்திரா தொடர்பாக முகநூலில் வெளியான பதிவை தான் வெளியிடவில்லை என்றும் ஷியாம்ஜித் தெரிவித்துள்ளார்.
கார்த்தாவிடம் இருந்து பணம் பெற்று வைதேகம் ரிசார்ட்டுக்காக இந்திரா பணம் பெற்றதாகக் கூறும் அந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
வைதேகம் ரிசார்ட்டில் கணக்காளராகப் பணியாற்றிய தனது மனைவி தீபா, எந்தவிதமான நிதி முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று ஷியாம்ஜித் கூறியுள்ளார்.
மேலும், தனது மனைவி சட்டவிரோதமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரிசார்ட்டில் பணியாற்றிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை வலியுறுத்தியதாகவும், ஆனால் போனஸ் வழங்க நிர்வாகம் சம்மதிக்காததால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜேம்ஸ் மாத்யு தன்னை எச்சரித்ததாகக் கூறிய ஷியாம்ஜித், “இந்தப் போக்கு சரியில்லை. இதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
வைதேகம் ரிசார்ட் தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகள் கேரள அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA