Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 அக்டோபர் (ஹி.ச.)
கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், மூத்த குடிமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடையே அன்பு, புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்க்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில், உலக அல்சைமர் நோய் விழிப்புணர்வு மற்றும் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஸ்வர்கா பவுண்டேஷன் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் கோவை வித்யா மந்திர் பள்ளி தாளாளர் பிரதேவ் ஆதிவேல்,ஸ்வர்கா பவுண்டேஷன் ஸ்வர்ணலதா,ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்..
நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ஆரம்யா,சேது,உள்ளிட்டோர் மாணவர்கள் மற்றும் முதியோர்களிடையே வாழ்வியல் முறைகள். குறித்து பேசினர்..
நிகழ்ச்சியில் முதியோர் கீழே விழுவதைத் தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகள், அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் சுயசார்புடன் வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
முதியவர்கள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, இணையவழிச் சேவைகளைப் பயன்படுத்தும்போது மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA