Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 25 அக்டோபர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையானது பெய்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டு உள்ளது.
அந்த வகையில்,
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் இந்த தடையானது விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானவுடன் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN