Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் தவெக ஆட்சி மீது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
அப்போது, தவெக ஆட்சிக்கு வாக்களித்தவர்களே தற்போது தங்களது முடிவை நினைத்து புலம்புவதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பெண்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படும் சிங்கப்பெண் படையினருக்கே பாதுகாப்பு அளிக்க மற்றொரு பாதுகாப்புப் படையை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், குழந்தைகள் கடத்தல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருவதாகவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
“6 மாதங்கள் கூட ஆட்சி தாங்காது”
“இந்த ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகளுக்கும் போதைப்பொருளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.
இந்த ஆட்சி இன்னும் 6 மாதங்கள் கூடத் தாக்குப்பிடிக்காது என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
மேலும், தீய சக்தி எது என்பது மக்களுக்குத் தற்போது தெளிவாகப் புரிந்துவிட்டதாகக் கூறிய அவர், தவெக ஆட்சியை விரைவில் அகற்றுவதற்குப் பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam