விடிய விடிய கொட்டும் மழையால் புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்- பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்
புதுச்சேரி, 25 அக்டோபர் (ஹி.ச.) வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் புதுச்சேரியில் விடியற்காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழையாக பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக த
Rain


புதுச்சேரி, 25 அக்டோபர் (ஹி.ச.)

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் புதுச்சேரியில் விடியற்காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழையாக பெய்து வருகிறது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

புதுவையில் அதிகாலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 8.30 30 மணி வரை 97 மில்லி மீட்டர் (9.7 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது.

கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும், திருபுவனை, பாகூர், நல்லவாடு, வீராம்பட்டினம் உள்ளிட்ட கிராமப்புறங்களிலும் மழை பெய்து வருகிறது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி கடற்கரையில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-1 ஏற்றப்பட்டுள்ளது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று கடலோரம் உள்ள மீனவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V