Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 26 அக்டோபர் (ஹி ச.)
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்டுரோடு பகுதியில் உள்ள பண்ணைத் தோப்பில் அமைந்துள்ள மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைப்பதற்கான வடிவமைப்பு தொடர்பாக, அவரது மனைவி சந்திரலீலா மற்றும் மகள் ஜனனி ஐஸ்வர்யா ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகளால் முத்திரை பதித்த இயக்குநர் பாரதிராஜாவின் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதற்காக, மணிமண்டபத்தின் வடிவமைப்பு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா மற்றும் மகள் ஜனனி ஐஸ்வர்யா ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.
Hindusthan Samachar / P YUVARAJ