Enter your Email Address to subscribe to our newsletters

கோழிக்கோடு, 26 அக்டோபர் (ஹி.ச.)
கேரளாவில் கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் செய்யும் அனைத்து முதலீடுகளுக்கும் அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று முதல்-மந்திரி வி.டி. சதீசன் அறிவித்துள்ளார்.
கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
கூட்டுறவுத் துறை பொதுமக்களிடம் மேலும் நம்பகத்தன்மையைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து பொதுமக்களின் பணத்தை முறைகேடாக எடுத்துச் செல்லும் நிலை ஏற்படக்கூடாது.
தவறு செய்பவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் அந்தச் சங்கத்தின் நிறுவனர் சி.என். விஜயகிருஷ்ணன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.கே. ராகவன் எம்.பி. சிறப்புரையாற்றினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கர நாற்காலிகளை கூட்டுறவு சங்கப் பதிவாளர் அனு எஸ். நாயர் வழங்கினார். நிகழ்ச்சியில் வி.கே. பைசல்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA