தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!
சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.) வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னர் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. தொடர்ந்து வலுப்பெற்ற இந்த வானிலை அமைப்பு புயலாக உருவெடு
Cyclone


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னர் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது.

தொடர்ந்து வலுப்பெற்ற இந்த வானிலை அமைப்பு புயலாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு அர்னாப் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என்றும், ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்னாப் புயல் காரணமாகக் கடல் பகுதியில் நிலவும் வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் முக்கியத் துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய ஒன்பது துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை, துறைமுகப் பகுதிகளில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

புயல் உருவாகியுள்ளதால் கடலில் காற்றின் வேகம் மற்றும் அலைகளின் தன்மையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

இதனால் கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வானிலை நிலவரத்தைக் கவனித்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அர்னாப் புயலின் தாக்கம் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தமிழகத்தில் இந்தப் புயலால் பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V