காங்கிரஸ் கட்சி விரக்தியின் உச்சத்தில் உள்ளது – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கிரிஜிராஜ் சிங் கண்டனம்!
புதுடெல்லி, 26 அக்டோபர் (ஹி.ச.) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துகள் குறித்து மத்திய அமைச்சர் கிரிஜிராஜ் சிங் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தந்தையை இழிவுபட
Giriraj singh


புதுடெல்லி, 26 அக்டோபர் (ஹி.ச.)

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துகள் குறித்து மத்திய அமைச்சர் கிரிஜிராஜ் சிங் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிரதமர் நரேந்திர மோடியின் தந்தையை இழிவுபடுத்தும் வகையில் கார்கே பேசியிருப்பது தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல. இது காங்கிரஸ் கட்சியின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றும், இத்தகைய அணுகுமுறை அவர்களின் இயல்பிலேயே ஊறிப்போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கார்கேவின் இந்த நடவடிக்கை திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அரசியல் உத்தியின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்காமல் இருப்பதும், கார்கே மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தாமல் இருப்பதும் தொடர்ந்தால், காங்கிரஸ் கட்சி கடும் விரக்தியில் செயல்பட்டு வருவதாக நாட்டு மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைப்போம் என்று கிரிஜிராஜ் சிங் கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சி தனது அரசியல் முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே தனது பதவியை ராஜினாமா செய்யும் வரையிலும், அவர் மன்னிப்புக் கேட்கும் வரையிலும், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இந்த விவகாரத்தில் மௌனம் கலைத்து தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வரையிலும் தங்களது எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என்றும் மத்திய அமைச்சர் கிரிஜிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V