Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 அக்டோபர் (ஹி.ச.)
‘அர்னாப்’ புயல் காரணமாக தெற்கு ரயில்வேயில் 2 சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி – நரசாபூர் சிறப்பு ரயிலின் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நரசாபூரில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று (அக். 28) அதிகாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 06020 சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நரசாபூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று மதியம் 1 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 17291 சிறப்பு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடியில் இருந்து கடந்த அக். 26-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்பட்ட ரயில் எண் 06019 தூத்துக்குடி – நரசாபூர் சிறப்பு ரயில், பீமாவரம் டவுன் ரயில் நிலையத்துடன் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பீமாவரம் டவுன் முதல் நரசாபூர் வரையிலான ரயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
‘அர்னாப்’ புயலை முன்னிட்டு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.என். நாராயண் தெரிவித்துள்ளார்.
எனவே, பயணிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பாக, தங்களது ரயில் சேவை குறித்த நிலவரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்
கொண்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P