சிஎம்ஆர்எல் வழக்கில் புதிய சர்ச்சை?- பினராயி விஜயன், முகமது ரியாஸ் குறித்து ஷாஜஹான் கேள்வி
திருவனந்தபுரம், 28 அக்டோபர் (ஹி.ச.) பினராயி விஜயனுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்; முகமது ரியாஸுக்கு ஏன் வேறு வழக்கறிஞர் என கே.எம். ஷாஜஹான் கேள்வி எழுப்பியுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்புடைய சிஎம்ஆர்எல்–எக்ஸாலாஜிக் பணப்
Pinarai


திருவனந்தபுரம், 28 அக்டோபர் (ஹி.ச.)

பினராயி விஜயனுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்; முகமது ரியாஸுக்கு ஏன் வேறு வழக்கறிஞர் என கே.எம். ஷாஜஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்புடைய சிஎம்ஆர்எல்–எக்ஸாலாஜிக் பணப் பரிவர்த்தனை வழக்கில் மனுதாரரான கே.எம். ஷாஜஹான், வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பினராயி விஜயன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜராகியுள்ளார்.

அதேபோல், அவரது மகளுக்காக ஹரிஹரன் என்ற மற்றொரு பிரபல வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஆஜராகியுள்ளார்.

ஆனால், முகமது ரியாஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் ஒருவரே ஆஜராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், அந்த வழக்கறிஞருக்கு ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஷாஜஹான் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்துள்ள நிலையில்,

அக்கட்சியின் மாநிலச் செயலக உறுப்பினராக இருக்கும் முகமது ரியாஸுக்காக அந்த அமைப்புடன் தொடர்புடைய வழக்கறிஞர் எவ்வாறு ஆஜராகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கே.எம். ஷாஜஹான் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Hindusthan Samachar / LOGESHWARI V