97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை -மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின்போது சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையில் தகுதியான வாக்காளர்களும
Stalin


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின்போது சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையில் தகுதியான வாக்காளர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுதொடர்பாகக் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தனை வாக்காளர்களின் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன,

அவர்களில் எத்தனை பேர் உண்மையில் தகுதியற்றவர்கள் என்பது குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வாக்குரிமை என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும்.

எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது தகுதியான வாக்காளர்கள் எவரும் தங்களது உரிமையை இழக்காத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கையாக உள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் எனத் திமுக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களையும், அதனால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்பட்டனவா என்பதையும் தனித்தனியாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V