அர்னாப் புயல் பாதிப்பு- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அமித்ஷா தொலைபேசியில் கேட்டறிந்தார்!
புதுச்சேரி, 29 அக்டோபர் (ஹி.ச.) புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பகுதியில் அர்னாப் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து, முதலமைச்சர் ரங்கசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் புயல் பாதிப்புகளை எத
Arnab


புதுச்சேரி, 29 அக்டோபர் (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பகுதியில் அர்னாப் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து, முதலமைச்சர் ரங்கசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்

புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான அர்னாப் புயல், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை அதிகாலை புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏனாம் பகுதியில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததுடன், சாலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், கனமழை மற்றும் புயல் அலைகளால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், கடலோரப் பகுதிகளில் உலர்த்தி வைக்கப்பட்டிருந்த மீன்களும் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களிலும் புயல் நிவாரண முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஏனாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் கேட்டறிந்தார்.

அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில அளவிலான மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய குழுக்கள் விரைவில் அனுப்பப்படும் என்றும், அதன் அடிப்படையில் கூடுதல் உதவிகள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN