தனது பிறந்தநாளையொட்டி தாயுடன் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த லாரன்ஸ்!
திருவண்ணாமலை, 29 அக்டோபர் (ஹி.ச.) நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தனது தாய் மற்றும் குடும்பத்தினரோடு வந்து சாமி தரிசனம் செய்தார். அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோத
Lawrence


திருவண்ணாமலை, 29 அக்டோபர் (ஹி.ச.)

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தனது தாய் மற்றும் குடும்பத்தினரோடு வந்து சாமி தரிசனம் செய்தார்.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது சிவனடியார்கள், நடிகர் ராகவா லாரன்ஸை தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற அண்ணாமலையார் போற்றி பாடல்களை பாடி நடிகர் ராகவா லாரன்ஸை வாழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து அம்மணி அம்மன் கோபுரத்திற்கு வெளியே வந்த நடிகர் ராகவா லாரன்ஸை சாதுக்கள் வாழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து,

சேஷாத்ரி ஆசிரமம் மற்றும் ரமணாஸ்ரமத்தில் சாமி தரிசனம் செய்தவர், சேஷாத்ரி ஆசிரமம் வெளியே அமர்ந்திருந்த சன்னியாசிகள் மற்றும் சாதுக்களிடம் வாழ்த்துக்களை பெற்றார், தொடர்ந்து சேஷாத்திரி ஆசிரமம் வெளியே அன்னதானமும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தனது சிறுவயதில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வரும்போது வேண்டுதல் எதுவும் வைக்க மாட்டேன். அவரை பார்த்தாலே போதும் என்ற ஆவலோடு கோவிலுக்கு வருவேன் என்று கூறினார்,

காஞ்சனா 4 விரைவில் வெளிவர இருப்பதாகவும் அவருடைய தம்பி நடிகர் எல்வின் நடித்த புல்லட் திரைப்படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும், தொடர்ந்து பென்ஸ் படமும் விரைவில் வர இருப்பதாக தெரிவித்த அவர், அரசியல் குறித்த கேள்விக்கு கோவிலில் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றார்.

Hindusthan Samachar / ANANDHAN