டெல்லியில் பட்டாசு வெடித்தால் காற்று மாசு அதிகரிக்கும் -உச்ச நீதிமன்றம் கருத்து!
புதுடெல்லி, 29 அக்டோபர் (ஹி.ச.) டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது தொடர்பான தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியக் கருத்தைத் தெரிவித்த
Supreme court


புதுடெல்லி, 29 அக்டோபர் (ஹி.ச.)

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது தொடர்பான தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

பட்டாசுகளை வெடித்தால் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரிப்பது உறுதி என்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு வாய்மொழியாகக் குறிப்பிட்டது.

வழக்கு விசாரணையின்போது, கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு ஓரளவு தளர்வு வழங்கப்பட்டதன் தாக்கம் குறித்து அதிகாரிகள் முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை என்று வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட அமிகஸ் கியூரி தெரிவித்தார்.

மேலும், பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதிலும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விதிமீறல்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட அமலாக்கக் குழுக்களும், விதிமீறல்கள் தொடர்பாகப் போதுமான தரவுகளை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், பட்டாசுகளை வெடித்தால் காற்று மாசுபாடு ஏற்படும் என்பது வெளிப்படையானது என்று குறிப்பிட்டனர்.

தொடர்ந்து, பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா? என அமிகஸ் கியூரியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதைக் கட்டுப்படுத்துவது, காற்றின் தரத்தைப் பாதுகாப்பது மற்றும் விதிமுறைகளை முறையாக அமல்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V