தமிழக மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம் - TNPSC மூலம் தேர்வு செய்ய அரசு அனுமதி!
சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின் வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியதாகத் தெரிவிக்கப்ப
Electric


சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின் வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, மொத்தம் 8,000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களைப் படிப்படியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முதல் கட்டமாக 2027ஆம் ஆண்டில் 5,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக 2028ஆம் ஆண்டில் 3,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தேர்வு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நேரடி நியமன அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல், அரசு வேலைக்காகத் தயாராகி வரும் இளைஞர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

இருப்பினும், கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் காலக்கெடு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளிட்ட விவரங்கள் தனியாக வெளியிடப்பட வேண்டியுள்ளது.

எனவே, இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் TNPSC மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கவனிக்க வேண்டுமென்றும்.,

ஆட்சேர்ப்பு தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே விண்ணப்ப நடைமுறைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V