தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் - விஜய் வசந்த் எம்.பி
கன்னியாகுமரி, 03 அக்டோபர் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி சந்திப்பில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி பேரணி நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி
போராட்டம்


கன்னியாகுமரி, 03 அக்டோபர் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி சந்திப்பில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி பேரணி நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளவங்காடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

போராட்டத்தில் மத்திய பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிராயன்குழியில் இருந்து காஞ்சிரகோடு, பம்மம், மார்த்தாண்டம் வழியாக குழித்துறை சந்திப்பு வரை அமைதி பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய விஜய் வசந்த்,

2029-ம் ஆண்டு ராகுல் காந்தியை பிரதமராக்க உறுதிமொழி எடுத்து பணியாற்ற வேண்டும் என கட்சியினரிடம் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் ஆணையம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam