ஆந்திரா ஸ்ரீசிட்டி தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் -அமைச்சர் நாரா லோகேஷ்!
ஆந்திரா, 03 அக்டோபர் (ஹி.ச.) ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பாய்லர் வெடித்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து கு
Andhra


ஆந்திரா, 03 அக்டோபர் (ஹி.ச.)

ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பாய்லர் வெடித்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மேலும் சிலர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், 4 தொழிலாளர்கள் உயிரிழந்தது ஈடுசெய்ய முடியாத துயரம் என்றும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் நாரா லோகேஷ் கூறியுள்ளார்.

மேலும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தேவையான சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும் என்றும் அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V