காஞ்சிபுரத்தில் பிரபல பட்டுச் சேலை கடைகளில் ஈ.டி ரெய்டு
காஞ்சிபுரம், 03 அக்டோபர் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டுச் சேலை உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பாபு ஷா அண்ட் கோ, பிரகாஷ் அண்ட் கோ மற்றும் மாலாஸ்ரீ ஆகிய நிறுவனங்களின் கடைகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நேற்
Silk


காஞ்சிபுரம், 03 அக்டோபர் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டுச் சேலை உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பாபு ஷா அண்ட் கோ, பிரகாஷ் அண்ட் கோ மற்றும் மாலாஸ்ரீ ஆகிய நிறுவனங்களின் கடைகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நேற்று இரவு முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை, விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது வரை சுமார் 16 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகளின் சோதனை நீடித்து வருகிறது.

இந்த சோதனைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், வரி தொடர்பான முறைகேடுகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான சந்தேகங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின்போது நிறுவனங்களின் கணக்குகள், ஆவணங்கள் மற்றும் பல்வேறு நிதி தொடர்பான பதிவுகள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது அதிகாரிகளின் விசாரணை தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும்.

வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் பிரபல பட்டுச் சேலை நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு வருவதால், காஞ்சிபுரம் வர்த்தக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், கடைகளுக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களிடையேயும் இந்த சோதனை கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து பட்டுச் சேலை வாங்க வந்த சில வாடிக்கையாளர்கள் சோதனை காரணமாக ஏற்பட்ட சூழலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனை முடிவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கையின் முழு விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V