இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பேர் சுட்டுக்கொலை - பஞ்சாபில் பரபரப்பு
பஞ்சாப், 03 அக்டோபர் (ஹி.ச.) பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தில் இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,
Punjap


பஞ்சாப், 03 அக்டோபர் (ஹி.ச.)

பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தில் இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக 2 நபர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த BSF வீரர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால், எச்சரிக்கையை மீறி அவர்கள் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் முன்னேற முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, BSF வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படும் இருவரும் உயிரிழந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் BSF வீரர்களின் கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவரும் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

எல்லைப் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V