விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு -மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய கணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கம்பம்மெட்டு, 30 அக்டோபர் (ஹி.ச.) கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், தபால் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மனைவியை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கிய கணவர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு
A


கம்பம்மெட்டு, 30 அக்டோபர் (ஹி.ச.)

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், தபால் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மனைவியை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கிய கணவர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இடுக்கி மாவட்டம் குழித்தொழு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ஸ்ரீஜா. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பணிக்காக தபால் அலுவலகத்துக்கு வந்த ஸ்ரீஜாவை, அங்கு வந்த சந்தோஷ் வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து, தான் கொண்டு வந்த இரும்புக் கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதற்கிடையே சந்தோஷ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

பட்டப்பகலில் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA