ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நிதி வலையமைப்பு முறியடிப்பு- 10 பேர் கைது!
ஜம்மு காஷ்மீர், 30 அக்டோபர் (ஹி.ச.) ஜம்மு காஷ்மீர்: ஷோபியான் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நிதி வலையமைப்பை ஷோபியான் போலீசார் முறியடித்துள்ளனர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில்,
Arrest


ஜம்மு காஷ்மீர், 30 அக்டோபர் (ஹி.ச.)

ஜம்மு காஷ்மீர்: ஷோபியான் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நிதி வலையமைப்பை ஷோபியான் போலீசார் முறியடித்துள்ளனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில்,

இதுவரை 10 பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர்,

இந்த வழக்கு தொடர்பாக ஷோபியான் காவல் நிலையத்தில் FIR எண் 231/2026-ன் கீழ், தொடர்புடைய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, பல்வேறு ஆன்லைன் பணப் பரிவர்த்தனை தளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிமாற்றங்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதன் மூலம் பல்வேறு நிலைகளில் பணம் பரிமாறப்பட்ட விவரங்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள், அவர்களது கூட்டாளிகள் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நபர்களைக் கொண்ட விரிவான வலையமைப்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து ரகசியமாகப் பணம் திரட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவ்வாறு திரட்டப்பட்ட பணம், ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த நிதித் தொடர்புகள் மூலம் பல்வேறு வழிகளில் அனுப்பப்பட்டு, லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான தளவாட உதவிகளை வழங்கவும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கும் நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிதி வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் பலரைக் கண்டறியவும், கூடுதல் நிதித் தொடர்புகளை உறுதிப்படுத்தவும், இதில் சம்பந்தப்பட்ட பிற நபர்களை அடையாளம் காணவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V