போலி வீடியோ வெளியிட்டதாக தவெக மீது திமுக புகார் - சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
தமிழ்நாடு, 31 அக்டோபர் (ஹி.ச.) திமுக தலைவர் வெளியிட்ட வீடியோவில் அவரது குரலை மாற்றி, அவதூறுக் கருத்துகளைச் சேர்த்து தவெகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செ
திமுக


தமிழ்நாடு, 31 அக்டோபர் (ஹி.ச.)

திமுக தலைவர் வெளியிட்ட வீடியோவில் அவரது குரலை மாற்றி, அவதூறுக் கருத்துகளைச் சேர்த்து தவெகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இ.பரந்தாமன் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், குற்றவியல் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் சைபர் குற்றச் சட்டப் பிரிவுகளின் கீழ், போலி வீடியோவை உருவாக்கி வெளியிட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை எந்தவித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும், தவெகவின் இத்தகைய செயல்பாடுகளை சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், காவல்துறை மட்டுமின்றி நீதிமன்றம் வாயிலாகவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வெற்றி பெறுவோம் என்றும் திமுக தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P