Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்வெட்டு: தமிழக மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தரப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரிசனம் செய்யச் சென்றபோது ஏற்பட்ட மின்வெட்டு விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட மின்தடைக்கு முதலில் பராமரிப்புப் பணிகள் காரணம் எனவும், பின்னர் பழுது காரணம் எனவும் மின்வாரியம் முரண்பட்ட விளக்கங்களை அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மின் கட்டண வசூலில் குளறுபடி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி, ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான முயற்சி உள்ளிட்ட விவகாரங்களையும் சுட்டிக்காட்டி விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் மின்வாரியம் பல்வேறு காரணங்களைக் கூறி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாக ஆய்வு செய்த பின்னரும், எரிசக்தித் துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மின்வாரியத்தில் நிர்வாகச் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மற்றும் எரிசக்தித் துறைக்கு வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam