இந்திரா காந்தி நினைவு தினம் -டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை
புதுடெல்லி, 31 அக்டோபர் (ஹி.ச.) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் நாடா
Delhi


புதுடெல்லி, 31 அக்டோபர் (ஹி.ச.)

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லியில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ஷாநவாஸ் ஆலம் கூறியதாவது,

இந்தியச் சமூகத்தின் வளர்ச்சியிலும், அரசியலமைப்பின் பாதையை வடிவமைப்பதிலும் இந்திரா காந்தி முக்கியப் பங்காற்றினார்.

குறிப்பாக, அரசியலமைப்பின் முகப்புரையில் 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோசலிச' என்ற சொற்கள் இடம்பெறுவதற்கு 42-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அவர் வழிவகுத்தார்.

இந்தச் சொற்களை நீக்க வேண்டும் என்ற முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் இந்திரா காந்தி முக்கியமான தலைவராகத் திகழ்ந்தார் என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, தெலங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர் கூறியதாவது,

நீண்ட நாட்களாக சக்தி ஸ்தலத்திற்கு வர முடியவில்லை. இன்று இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்துவதற்காக அனைவரும் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். நாட்டிற்கு இந்திரா காந்தியைப் போன்ற ஒரு தலைவர் தற்போது மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறார்.

இன்றளவும் மக்கள் அவரை 'அம்மா' என்று அன்புடன் அழைக்கின்றனர். தெலங்கானாவில் இந்திரம்மா அரசின் கொள்கைகளையும், இந்திரா காந்தியின் பாரம்பரியத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் ஒட்டுமொத்தக் கட்சியும் உறுதியாக உள்ளது.

அவரது பெயரையும் கொள்கைகளையும் முன்னிறுத்தி தொடர்ந்து ஆட்சி நடத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V