சர்தார் படேல் பிறந்தநாள்- ஜெய்ப்பூரில் ஒற்றுமைக்கான ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார் ராஜஸ்தான் முதல்வர்!
ஜெய்ப்பூர், 31 அக்டோபர் (ஹி.ச.) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ''Run for Unity'' (ஒற்றுமைக்கான ஓட்டம்) நிகழ்ச்சியை முதலமைச்சர் பஜன்லால் சர்மா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சர்தார் வல்லபாய் படேலின் பி
Jaipur cm


ஜெய்ப்பூர், 31 அக்டோபர் (ஹி.ச.)

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 'Run for Unity' (ஒற்றுமைக்கான ஓட்டம்) நிகழ்ச்சியை முதலமைச்சர் பஜன்லால் சர்மா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பஜன்லால் சர்மா,

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதில் சர்தார் வல்லபாய் படேல் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாக உருவாக்குவதிலும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும் படேல் முக்கியப் பங்காற்றியதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் வெறும் விளையாட்டு நிகழ்ச்சி மட்டுமல்ல என்றும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் சுயமரியாதையைப் பாதுகாப்பதற்கான மக்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்திய இந்த உயரிய கொள்கைகளை இன்றைய தலைமுறையினரும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியும் தனது 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியின் அண்மைய உரையில், ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஒற்றுமைக்கான ஓட்டம் சர்தார் வல்லபாய் படேலின் நினைவையும், அவர் வலியுறுத்திய தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்ததாக அவர் கூறினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V