முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் - சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் சென்று மரியாதை!
புதுடெல்லி, 31 அக்டோபர் (ஹி.ச.) உலகளவில் இன்று எத்தனையோ பெண்கள் அரசியலில் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி என்று சொன்னால் மிகையாகாது. தேசப்பற்று, சேவை, தைரியம், வீரம் என அனைத்தையும் ஒருசேர தனக்குள் கலவையாக கொ
Congress


புதுடெல்லி, 31 அக்டோபர் (ஹி.ச.)

உலகளவில் இன்று எத்தனையோ பெண்கள் அரசியலில் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி என்று சொன்னால் மிகையாகாது. தேசப்பற்று, சேவை, தைரியம், வீரம் என அனைத்தையும் ஒருசேர தனக்குள் கலவையாக கொண்டு செயல்பட்டவர் அவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரின் மகளாக இருந்தாலும் தனது தனித்திறமை மற்றும் அசாத்தியமான செயல்பாடுகளால நாட்டு மக்களிடையே நன்கு அறியப்பட்டவர். இவர் பிரதமராக பதவி வகித்த காலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்ற பெயரை பெற்றார்.

என்ன தான் இவருடைய செயல்பாடுகள் இவரை இரும்பு பெண்மணியாக காட்டினாலும், பெண்ணிய ஒடுக்குமுறை, கல்வியின்மை, சாதிய பாடுபாடு போன்ற அனைத்தையும் தனது கல்வி, காதல் திருமணம் போன்றவற்றின் மூலம் உடைத்துக் காட்டி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாரோ அதே அளவிற்கு இவருக்கு எதிர்ப்புகளும் இருந்தன.

அதன் காரணமாக தனது மெய்க்காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று.

இதனையொட்டி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தி, அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட பதிவில், 'இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்று நினைவுகூர்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது நினைவு தினத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உருக்கமான அஞ்சலி செலுத்தினார்.

வலிமை, உறுதிப்பாடு மற்றும் ஆற்றல்மிக்க தலைமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இந்திரா காந்திக்கு கோடிக்கணக்கான முறை தலைவணங்கி மரியாதை செலுத்துவதாகக் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V