Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 அக்டோபர் (ஹி.ச.)
கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பின்புறம் உள்ள மைல்ஸ் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
அதில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் எடுத்துச் செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
சுற்றுப்புறத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தபோதிலும், சிறுவர்கள் இருவரும் ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
சிறுவயதிலேயே இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேபோல், கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகிலும் ஹெல்மெட் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள கடை ஒன்றின் முன்பு இருசக்கர வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஹெல்மெட்டை மர்ம நபர் ஒருவர் எடுத்துள்ளார்.
பின்னர், அந்த ஹெல்மெட்டை தனது லுங்கிக்குள் மறைத்துக்கொண்டு, எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து நடந்து செல்லும் காட்சியும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் பொதுமக்களின் ஹெல்மெட்கள் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் ஹெல்மெட்களை வாகனங்களில் பாதுகாப்பாக வைப்பது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் சென்றால் போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்படும் நிலையில், வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லும்போது ஹெல்மெட் திருடப்படும் சம்பவங்களும் தொடர்வதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெல்மெட் திருட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V