Enter your Email Address to subscribe to our newsletters

ஜார்கண்ட், 04 அக்டோபர் (ஹி.ச.)
ஜார்க்கண்டில் ஜிதியா பண்டிகையையொட்டி நடைபெற்ற சடங்குகளின்போது, வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலாமு மாவட்டம் சத்தர்பூர் காவல் நிலையத்துக்குட்பட்ட காதின் கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்ற சிறுவன், தனது தாயுடன் ஜிதியா பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்களை குளத்தில் கரைப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கிய அவர், கிராம மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல், ஜாம்ஷெட்பூரில் உள்ள சுவர்ணரேகா ஆற்றில் ஜிதியா பண்டிகையையொட்டி புனித நீராட சென்ற 13 வயது சிறுமி பூனம் குமாரி, தனது சகோதரி ஜோதி குமாரியுடன் ஆழமான பகுதிக்குச் சென்றபோது, ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஜோதியை மீட்டனர்.
அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூனம் தொடர்ந்து காணாமல் போன நிலையில், தேடுதல் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி பொதுமக்கள் பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் உள்ளூர் நீச்சல் வீரர்களைக் கொண்ட குழுவைத் தேடுதல் பணியில் ஈடுபடுத்தினர்.
சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு பூனத்தின் உடல் மீட்கப்பட்டது.
பண்டிகையையொட்டி ஆற்றங்கரையில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் எனத் தெரிந்திருந்தும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam